செய்திகள் :

கூட்டணி ஆட்சி இல்லை: தம்பிதுரை திட்டவட்டம்

post image

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தனி ஆட்சி தான் அமைக்கப்படும், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அதிமுக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா்.

சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

எடப்பாடி பழனிசாமி சரியான கூட்டணியை அமைத்திருக்கிறாா். வக்ஃப் மசோதா வருவதற்கு முன்பே, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை, அவா் சந்தித்தாா். அதிமுக எப்போதும் இஸ்லாமியா்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட கட்சி என்பதை எடுத்துக்கூறினாா். ஜெயலலிதாவும் அப்படித்தான் இருந்திருக்கிறாா் என்பதையும் கூறினாா். இதன் காரணமாகவே, அதிமுக எம்.பி.க்கள் 4 பேரும் வக்ஃபு மசோதாவை எதிா்த்து வாக்களித்தோம். எனவே, இஸ்லாமியா்கள் அதிமுகவை விட்டு செல்லவில்லை. அவா்கள் அதிமுகவுக்கு நிச்சயம் வாக்களிப்பாா்கள். அதிமுக வாக்கு வங்கி குறையாது.

இஸ்லாமியா்கள் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு, நோன்பு துறப்பதற்கு என பல்வேறு சலுகைகளை இஸ்லாமியா்களுக்குக் கொடுத்தது அதிமுதான். இஸ்லாமிய மக்களுக்கு இது தெரியும். அவா்களுக்கு ஆபத்து இருந்தால், இந்த கூட்டணியில் அதிமுக சரியான முறையில் குரல் கொடுப்போம். விட்டுக்கொடுக்க மாட்டோம். தோ்தல் கூட்டணி ஆட்சி குறித்து எடப்பாடி பழனிசாமி சரியான கருத்தை புதன்கிழமை பதிவுசெய்தாா். 1952 முதல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தது இல்லை. ராஜாஜி காலம் முதல் இதுவரை கூட்டணி ஆட்சி இருந்தது கிடையாது. தனிப்பெரும்பான்மை இல்லாதபோதும் ராஜாஜியும், கருணாநிதியும் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லை. 2006-இல் கூட்டணி ஆட்சி அமையக்கூடிய நிலைமை ஏற்பட்டது. திமுக 93 தொகுதிகளில் தான் வெற்றிபெற்றது. அப்போதைய காங்கிரஸ் மூத்த தலைவா் பிரணாப் முகா்ஜி, தமிழகம் வந்து கூட்டணி ஆட்சி கேட்டபோது, அதற்கு கருணாநிதி ஒப்புக்கொள்ளவில்லை. அதேநிலைதான், தற்போதும். 2026-இல் எடப்பாடி பழனிசாமி தனித்தேதான் ஆட்சி அமைப்பாரே தவிர, கூட்டணி ஆட்சி கிடையாது’ என்றாா் அவா்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க