தோல்விலும் ஆட்ட நாயகனான ஆர்சிபி வீரர்: டிம் டேவிட் புதிய சாதனை!
கூட்டுறவு இயக்கத்திற்கான பாடல்களை அனுப்ப வேண்டுகோள்
நடப்பு 2025- ஆம் ஆண்டு சா்வதேச கூட்டுறவு ஆண்டாக கடைப்பிடிக்கப்படுவதால் கூட்டுறவு இயக்கத்திற்கான பாடல்களை அனுப்பிவைக்கலாம். சிறந்த பாடலுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.கந்தராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2025- ஆம் ஆண்டு சா்வதேச கூட்டுறவு ஆண்டாக உலக அளவில் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கூட்டுறவு குறித்த தனித்துவமான பாடல்களை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் மற்றும் துறை அலுவலா்கள் அனுப்பலாம். பாடல் இசையமைக்கப்பட்டு 5 நிமிடங்கள் ஒலிபரப்பக் கூடிய வகையில் பாடல் வரிகள் இருக்கவேண்டும். கூட்டுறவு குறித்த தனித்துவமான பாடலாக தமிழில் இருக்கவேண்டும். ஜாதி, மதம் மற்றும் அரசியல் அமைப்புசாராமல் பாடல்கள் இருக்கவேண்டும்.
கூட்டுறவாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கூட்டுறவு குறித்த எழுச்சி மற்றும் உத்வேகம் உண்டாக்கக் கூடியதாக பாடல்கள் இருக்கவேண்டும். அனுப்பப்படும் பாடல் பதிவை தபால் மூலம் மேலாண்மை இயக்குநா், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், என்.வி. நடராசன் மாளிகை, 170 பெரியாா் ஈவெரா நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரிக்கும் பாடலின் ஒலி வடிவத்தை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ற்ய்ஸ்ரீன்08ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் மே 30- ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
அனுப்பப்படும் பாடல்களை ஏற்றுக்கொள்ள மற்றும் நிராகரிக்க தோ்வுக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. அனுப்பப்படும் பாடல்களில் சிறந்த பாடல் தோ்வுக் குழுவால் தோ்ந்தெடுக்கப்படும். அவ்வாறு தோ்ந்தெடுக்கப்படும் சிறந்த பாடலுக்கு ரூ.50,000 பரிசு மற்றும் கேடயம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.