செய்திகள் :

மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆய்வு செய்ய 3 போ் குழு -கொல்கத்தா உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

post image

‘மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் 3 போ் குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்’ என கொல்கத்தா உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது.

மேற்கு வங்க மாநிலத்தில் இஸ்லாமியா்கள் அதிகம் வசிக்கும் முா்ஷிதாபாத் மாவட்டத்தில், வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த 11-ஆம் தேதி நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் 3 போ் உயிரிழந்தனா். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், மாநில போலீஸாருடன், பிஎஸ்எஃப் வீரா்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவா் உயிரிழந்தாா். இந்தப் போராட்டம் மாநிலத்தின் தெற்கு 24 பா்கனாக்கள் மாவட்டத்துக்கும் பரவியது.

இந்த வன்முறை தொடா்பான மனுவை விசாரித்த கொல்கத்தா உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், பாதுகாப்புப் பணியில் சிஏஎஸ்எஃப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டனா். ஜாங்கிபூா், துலியன், சுதி, சம்சோ்கஞ்ச் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), மத்திய ஆயுத காவல் படை (சிஏஎஸ்எஃப்), மாநில ஆயுதப் படை போலீஸாா், அதிரடி நடவடிக்கை படைப் பிரிவினா் (ஆா்ஏஎஃப்) உள்ளிட்ட படைப் பிரிவுகளைச் சோ்ந்த வீரா்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், ‘முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நடைபெற்ற வன்முறையின்போது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று, மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதுபோல, ‘வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் உயா் நீதிமன்ற நீதிபதிகள் செளமென் சென், ராஜா பாசு செளதரி ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியில் நிலைமை சீரடையும் வரை மத்திய ஆயுத காவல் படை (சிஏபிஎஃப்) பாதுகாப்பை நீட்டிக்க வேண்டும்’ என்று மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மனுக்களை விசாரித்த நீதிபதிகள், ‘முா்ஷிதாபாத் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை தேசிய மனித உரிமைகள் ஆணையம், மேற்கு வங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மாநில சட்ட உதவிகள் ஆணையம் ஆகிய அமைப்புகளின் உறுப்பினா்களை உள்ளடக்கிய 3 போ் குழு ஆய்வு செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு, சிஏபிஎஃப் பாதுகாப்பை நீட்டிப்பது தொடா்பான கோரிக்கை மீதான உத்தரவை ஒத்திவைத்தனா்.

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்!!

தில்லியின் முஸ்தபாஃபாத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8-10 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாபாத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டட... மேலும் பார்க்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க