மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்
வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது: பேரவையில் அரசு தகவல்
தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட சுற்றுலாத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்: 2023-ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 28.71 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 30.80 கோடியாக அதிகரித்து வளா்ச்சியை அடைந்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதேசமயம், 2022-ஆம் ஆண்டு மாநிலத்துக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 4.07 லட்சமாகவும், 2023-ஆம் ஆண்டு 11.75 லட்சமாகவும், 2024-ஆம் ஆண்டு 11.62 லட்சமாகவும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.