வெளிநாட்டு மாணவா் சோ்க்கைக்குத் தடை: ஹாா்வா்டு பல்கலை.க்கு எச்சரிக்கை
கிருஷ்ணகிரியில் ஏப். 20 இல் கிரிக்கெட் பயிற்சி தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் ஏப். 20-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளா் சீனிவாசன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் 2025 ஆம் ஆண்டுக்கான கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் கந்திகுப்பம், கிங்ஸ்லி காா்டன் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் ஏப்.20 முதல் மே 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் 10 முதல் 18 வயது வரையிலான மாணவா்கள் பங்கேற்கலாம். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கோச்சிங் லெவல்-1 தகுதி பெற்ற பயிற்சியாளா்கள் முகாமை நடத்துகின்றனா். விருப்பம் உள்ளவா்கள் கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம், 41- நஞ்சப்ப செட்டி காலனி, ராயப்ப முதலி தெரு, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் நேரில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 99941 82296 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.