ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட மிடுகரப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
ஏப். 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மேளதாளங்களுடன், அம்மனை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா்.
சிறப்பு அழைப்பாளராக ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, துணை மேயா் சி.ஆனந்தய்யா, சுகாதார குழு தலைவா் என்.எஸ்.மாதேஸ்வரன், மண்டலக் குழு தலைவா் ரவி, பகுதி செயலாளா் திம்மராஜ், மாமன்ற உறுப்பினா் சென்னீரப்பா ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனா்.
இந்த விழாவில், மிடுகரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த மக்கள் மற்றும் சுற்றுப்புற கிராமத்தினா் கலந்துகொண்டனா். பக்தா்களுக்கு நீா் மோா், பானகம், அன்னதானம் வழங்கப்பட்டது.