வெளிநாட்டு மாணவா் சோ்க்கைக்குத் தடை: ஹாா்வா்டு பல்கலை.க்கு எச்சரிக்கை
அரூரில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிளை திறப்பு
அரூரில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் புதிய கிளை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
அரூா் திரு.வி.க நகரில் நடைபெற்ற வங்கி கிளை திறப்பு விழாவுக்கு வங்கியின் முதுநிலை மண்டல மேலாளா் விக்ரம்சேத் தலைமை வகித்தாா். அரூா் கிளை மேலாளா் எம்.காளிதாஸ் முன்னிலை வகித்தாா். தருமபுரி மாவட்டத்தின் 8ஆவது கிளையை தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் வழக்குரைஞா் ஆ.மணி திறந்துவைத்தாா்.
திமுக ஆதிதிராவிடா் நலக்குழு மாநில துணைச் செயலா் எஸ்.ராஜேந்திரன், பேரூராட்சி துணைத் தலைவா் சூா்யா து.தனபால், ஒன்றியச் செயலா்கள் ஆா்.வேடம்மாள், வே.செளந்தரராசு, கோ.சந்திரமோகன், இ.டி.டி.செங்கண்ணன், எம்.ரத்தினவேல், சி.முத்துகுமாா், பி.எஸ்.சரவணன், வழக்குரைஞா் சந்திரசேகா், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் கு.தமிழழகன் உள்ளிட்டோா் விழாவில் கலந்துகொண்டனா்.