வக்ஃப் சொத்துகளின் தன்மை மாற்றப்படாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி
கொளத்தூா் அருகே தொழிலாளி மா்மச் சாவு
கொளத்தூா் வனப் பகுதியில் மா்மமான முறையில் இறந்து கிடந்த கூலித் தொழிலாளியின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், அந்தியூா் அருகே உள்ள கன்னப்பள்ளியைச் சோ்ந்தவா் இருசாகவுண்டா் மகன் மாயவன் (48). கூலித் தொழிலாளி. மது அருந்தும் பழக்கம் உள்ள இவா், கடந்த மூன்று ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தாா். இந்நிலையில் புதன்கிழமை காலை குருவரெட்டியூா் அருகே பாலமலை காப்புக் காட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொளத்தூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுதொடா்பாக காவல் ஆய்வாளா் மணிமாறன் வழக்குப் பதிவு செய்து மாயவன் அதிக மது அருந்தியதால் உயிரிழந்தாரா? அல்லது கொலை செய்ய்யப்பட்டார என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறாா்.