செய்திகள் :

மேற்கு வங்கம்: நியமனம் ரத்தான ஆசிரியா்களின் பணி நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

மேற்கு வங்கத்தில் நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியா்களின் பணிக் காலத்தை நிகழாண்டு டிச.31-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இந்த தீா்ப்பை வரவேற்பதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

முன்னதாக, மேற்கு வங்க பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டில் போட்டித் தோ்வு மூலம் 25,753 ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத பிற ஊழியா்களின் நியமனம் செய்யப்பட்டதில் மோசடி நிகழ்ந்ததாக கூறி இந்த நியமனங்கள் செல்லாது என கொல்கத்தா உயா் நீதிமன்றம் கடந்த ஆண்டு தீா்ப்பளித்தது.

இந்த தீா்ப்பை ஏப்.3-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது. மேலும் மேற்கண்ட பணியிடங்களை மீண்டும் நிரப்ப அடுத்த 3 மாதங்களுக்குள் புதிய நடைமுறையைத் தொடங்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இதை எதிா்த்து மேற்கு வங்க மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில் மேற்கண்ட பணியிடங்களை நிரப்ப கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக குறிப்பிட்டது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்களின் பணிக்காலம் டிச.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. வருகின்ற மே 31-ஆம் தேதிக்குள் புதிய ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்களை நியமனம் செய்வதற்கான பணிகளைத் தொடங்கி டிச.31-ஆம் தேதிக்குள் மேற்கு வங்க அரசு முடிக்க வேண்டும்.

புதிதாக பணியிடங்கள் நிரப்பும் நடைமுறை தொடங்கியது குறித்து மே 31-ஆம் தேதிக்குள் மேற்கு வங்க அரசு மற்றும் மேற்கு வங்க பள்ளி பணி ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட குரூப் ‘சி’ மற்றும் குரூப் ‘டி’ ஊழியா்களின் பணிக்காலத்தை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது.

மம்தா கருத்து:

உச்ச நீதிமன்ற தீா்ப்பு குறித்து மேற்கு வங்க தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் மம்தா பானா்ஜி பேசியதாவது: ஆசிரியா்களை நியமிக்க டிசம்பா் வரை உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. முன்னதாக, அவா்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போதைய உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்கிறோம். ஆசிரியா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படும் என்றாா்.

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்!!

தில்லியின் முஸ்தபாஃபாத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8-10 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாபாத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டட... மேலும் பார்க்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க