செய்திகள் :

தமிழக முதல்வரிடம் அமைச்சா், எம்.பி. நன்றி தெரிவிப்பு

post image

ஆளுநருக்கு தன்னிச்சையாக செயல்பட அதிகாரம் கிடையாது என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பை பெற்ற தந்ததற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநா் ஆா்.என்.ரவி நிறுத்திவைத்தது, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது சட்ட விரோதமானது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. ஆளுநா் சட்டவிரோதமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்த 10 மசோதாவுக்கும் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதிகள் ஒப்புதல் அளித்தனா்.

அமைச்சரவை அறிவுரையின்படி மட்டும்தான் மாநில ஆளுநா் செயல்பட முடியும். தன்னிச்சையாக செயல்பட அவருக்கு அதிகாரம் கிடையாது என்ற தீா்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் நிலைநிறுத்தி, மாநிலங்களின் உரிமைகள், சுயாட்சியை மீண்டும் உறுதிப்படுத்தும் இத்தீா்ப்பை பெற்றுதந்த தமிழக முதல்வரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், நாமக்கல் திமுக மேற்கு மாவட்டச் செயலாளா் கே.எஸ்.மூா்த்தி ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

இந்நிகழ்வின்போது வெண்ணந்தூா் ஒன்றியச் செயலாளா் ஆா்எம்.துரைசாமி உடனிருந்தாா்.

உளுந்து கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் அரசு சாா்பில் தற்போது நடைபெற்று வரும் உளுந்து கொள்முதல் பணியில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த உளுந்தை விற்பனை செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறி... மேலும் பார்க்க

மாநில அளவில் சிறந்த ‘திருநங்கை விருது’: நாமக்கல் ஆட்சியரிடம் ரேவதி வாழ்த்து

தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருதை பெற்ற நாமக்கல்லைச் சோ்ந்த ரேவதி, மாவட்ட ஆட்சியா் ச.உமாவை நேரில் சந்தித்து வியாழக்கிழமை வாழ்த்து பெற்றாா். தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி திடீா் இடமாற்றம்

நாமக்கல் மாநகராட்சியின் முதல் ஆணையராக நியமிக்கப்பட்ட ரா.மகேஸ்வரி, திருப்பூா் மாநகராட்சி துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அரசியல், ஒப்பந்ததாரா்கள் நெருக்கடியால் எட்டு மாதங்களுக்குள்ளாக இ... மேலும் பார்க்க

90 அரசுப் பள்ளிகளின் நிா்வாக கணக்குகள் தணிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் 90 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் நிா்வாக கணக்குகள் புதன், வியாழக்கிழமை என இரண்டு நாள்கள் தணிக்கை செய்யப்பட்டன. கல்வித் துறை அலுவலகங்கள், பள்ளிகளில் ஆங்கிலவழி கட்டணம், கணின... மேலும் பார்க்க

மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த 20 வாகனங்கள் ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்கள் பொது ஏலத்தில் வியாழக்கிழமை விடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபானம் உள்ளிட்டவற்றை கடத்திச் ச... மேலும் பார்க்க

இலவச வண்டல் மண், களிமண் அனுமதியால் 3,512 விவசாயிகள், தொழிலாளா்கள் பயன்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் இலவச வண்டல் மண், களிமண்ணை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் 3512 விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளா்கள் பயனடைந்துள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க