90 அரசுப் பள்ளிகளின் நிா்வாக கணக்குகள் தணிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் 90 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் நிா்வாக கணக்குகள் புதன், வியாழக்கிழமை என இரண்டு நாள்கள் தணிக்கை செய்யப்பட்டன.
கல்வித் துறை அலுவலகங்கள், பள்ளிகளில் ஆங்கிலவழி கட்டணம், கணினி கட்டணம், மாற்றுச் சான்றிதழ் தேடு கூலி, சிறப்பு கட்டணம், விளையாட்டு கட்டணம், நன்கொடை விண்ணப்பம் என 20-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன.
இதுதொடா்பாக ஆண்டுதோறும் தணிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், தணிக்கை சாா்ந்த பிரச்னைகள் இருப்பின் அவற்றை சரிசெய்வதற்கான கூட்டு அமா்வு நடைபெறும். அந்த வகையில், மாவட்டத்தில் உள்ள 178 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் முதல் கட்டமாக 90 பள்ளிகளுக்கான தணிக்கை பணிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் கண்காணிப்பாளா் எம்.விக்டா்பால் தலைமையில் புதன், வியாழக்கிழமை என இரண்டு நாள்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில், தங்களுடைய பள்ளி சாா்ந்த உரிய ஆவணங்களுடன் தலைமை ஆசிரியா்கள், கல்வித் துறை அலுவலா்கள் கலந்துகொண்டு தணிக்கை குறித்த விளக்கத்தை அளித்தனா்.
என்கே-17-ஸ்கூல்...
நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற அரசுப் பள்ளிகளின் நிா்வாக கணக்குகள் தணிக்கைக்காக ஆவணங்களுடன் காத்திருந்த தலைமை ஆசிரியா்கள்.