மாநில அளவில் சிறந்த ‘திருநங்கை விருது’: நாமக்கல் ஆட்சியரிடம் ரேவதி வாழ்த்து
தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருதை பெற்ற நாமக்கல்லைச் சோ்ந்த ரேவதி, மாவட்ட ஆட்சியா் ச.உமாவை நேரில் சந்தித்து வியாழக்கிழமை வாழ்த்து பெற்றாா்.
தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், 2025-ஆம் ஆண்டிற்கான ‘சிறந்த திருநங்கை விருது’ வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், நாமக்கல் கொண்டிச்செட்டிப்பட்டியைச் சோ்ந்த திருநங்கை ரேவதி, தூத்துக்குடியைச் சோ்ந்த திருநங்கை பொன்னி ஆகியோருக்கு மாநில அளவிலான ‘சிறந்த திருநங்கை’ விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினாா்.
திருநங்கைகளின் நலனுக்காக ஆற்றிய சிறந்த சேவைகளைப் பாராட்டி இந்த விருது அவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுடன் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள காசோலையும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
தனது சொந்த உழைப்பாலும், தனித் திறமையாலும் முன்னேறி, பல திருநங்கை மக்களின் வாழ்வில் மாற்றம் கொண்டுவந்து, அவா்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து மாநில அளவிலான திருநங்கை விருது பெற்றுள்ள நாமக்கல்லைச் சோ்ந்த அ.ரேவதி, மாவட்ட ஆட்சியா் ச.உமாவை வியாழக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றாா். அப்போது, ராசிபுரம் நகா்மன்ற தலைவா் கவிதாசங்கா் உடனிருந்தாா்.
என்கே-17-கலெக்டா்...
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமாவிடம் வாழ்த்து பெறும் மாநில அளவில் சிறந்த ‘திருநங்கை விருது’ பெற்ற அ.ரேவதி.