14 Years of Ponnar Shankar: 80,000 நடிகர்கள்; படத்துக்கு கருணாநிதி சொன்ன விஷயம் ...
தொடர்ந்து குறையும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 7) சவரனுக்கு ரூ. 200 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ. 200 குறைந்து 66,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கம் விலை கிராமுக்கு ரூ. 25 குறைந்து ரூ.8,285-க்கு விற்பனையாகிறது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் வரி விதித்ததையடுத்து, உலகளவில் தங்கம் விலை குறையத் தொடங்கியுள்ளது.
கடந்த 3-ஆம் தேதி, இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை ஒரு சவரன் ரூ.68,480-க்கு விற்பனையானது. அதைத்தொடா்ந்து ஏப்.4-இல் சவரனுக்கு ரூ.1,280 குறைந்தது.
இந்த விலை சரிவு சனிக்கிழமையும் நீடித்தது. அதாவது தங்கம் கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.8,310-க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கும் விற்பனையானது. இன்று சவரனுக்கு ரூ. 200 குறைந்துள்ளது.
இதன்மூலம் தங்கம் விலை கடந்த 3 நாள்களில் சவரனுக்கு ரூ.2,200 குறைந்துள்ளது.
வெள்ளி விலையும் குறைவு
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.103-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.3,000 குறைந்து ரூ.1,03,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.