செய்திகள் :

அமெரிக்க இறக்குமதிக்கு 25% வரி: சீனாவைத் தொடர்ந்து ஐரோப்பா அறிவிப்பு

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்புக்கு போட்டியாக ஐரோப்பிய ஒன்றியமும் வரி உயர்வை அறிவித்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு 20% வரியை அமெரிக்கா விதித்துள்ள நிலையில், இந்த வரி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முன்னதாக சீன இறக்குமதிகளுக்கு 104% வரி விதித்த அமெரிக்காவுக்கு போட்டியாக, அமெரிக்க இறக்குமதிகளுக்கு 84% வரியை சீன அரசு அறிவித்திருந்தது.

பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் மிக முக்கிய நாடுகள் மாறிமாறி வரி உயர்வை அறிவித்து வருவதால், சந்தை முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

முன்னதாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கி போன்ற மதுபானங்களுக்கு 50% இறக்குமதி வரி விதிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் கூறியிருந்தது. ஆனால், இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

மதுபானங்களுக்கான வரியை உயர்த்தினால், ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வைன் உள்ளிட்ட பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.

இதனிடையே அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் தவிர்த்து மற்ற சில பொருள்களுக்கான வரியை 25 சதவிகிதமாக உயர்த்த ஐரோப்பா முடிவு செய்துள்ளது.

இதன்படி, கோழி, அரிசி, சோளம், உலர் திராட்சை, பருப்புகள், மோட்டார் சைக்கிள், பிளாஸ்டிக், ஆடைகள், வண்ணப்பூச்சுகள், மின்னணு பொருள்கள் போன்றவற்றுக்கு இந்த வரி பொருந்தும் என அறிவித்துள்ளது. ஏப்ரல் 15ஆம் தேதியில் இருந்து இந்த வரி அமலுக்கு கொண்டுவரப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக கூடிய விரைவில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இறக்குமதி வரி உயர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு எந்தெந்தப் பொருள்களுக்கு வரி விதிப்பது, எவ்வளவு வரி விதிப்பது என்பவை இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.

இதையும் படிக்க | மருந்துப் பொருள்களுக்கு விரைவில் வரி உயர்வு: டிரம்ப்

1971 கொடுமைகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்: பாகிஸ்தானிடம் வங்கதேசம் வலியுறுத்தல்

டாக்கா: 1971-ஆம் ஆண்டின் விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவம் இழைத்த கொடுமைகளுக்காக அந்த நாடு மன்னிப்பு கோர வேண்டும் வங்கதேசம் வியாழக்கிழமை வலியுறுத்தியது.15 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும்... மேலும் பார்க்க

பூமிக்கு வெளியே உயிரினம்: இதுவரை இல்லாத உறுதியான ஆதாரம்?

லண்டன்: சூரியக் குடும்பத்துக்கு வெளியே கே2-18பி என்ற கிரகத்தில் உயிரினங்கள் இருக்கலாம் என்பதற்காக இதுவரை இல்லாத மிக உறுதியான ஆதாரம் பிரிட்டன் ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமா... மேலும் பார்க்க

கடந்த 96 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு!

வாடிகன் நகரம், உலகின் மிகக் சிறிய நாடாகக் கருதப்படும் நிலையில், கடந்த 96 ஆண்டுகளில், இங்கு ஒரு குழந்தைக் கூட பிறக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் இந்த நகரில் இடம்பெற்ற... மேலும் பார்க்க

ஹார்வர்டு பல்கலை.க்கு அளிக்கப்படும் வரி விலக்கு ரத்து?

ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு அளிக்கப்படும் வரி விலக்கை ரத்து செய்ய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பல்வேறு நா... மேலும் பார்க்க

அடுத்த வாரம் இந்தியா வருகிறாா் அமெரிக்க துணை அதிபா்

அமெரிக்க துணை அதிபா் ஜெ.டி.வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ் மற்றும் 3 குழந்தைகளுடன் அடுத்த வாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறாா். அமெரிக்க அதிபரின் டிம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பு அறிவிப்பால் சா்வதேச ... மேலும் பார்க்க

பிரிட்டன்: மருத்துவ உயா் கல்வி அமைப்பின் தலைவராக இந்திய வம்சாவளி மருத்துவா்

பிரிட்டனில் மிகப் பழமை வாய்ந்த ‘ராயல் காலேஜ் ஆஃப் ஃபிஷிசியன்ஸ்’ (ஆா்சிபி) மருத்துவ உயா் கல்வி அமைப்பின் 123-ஆவது தலைவராக இந்திய வம்சாவளி பெண் மருத்துவா் மும்தாஜ் படேல் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இந்த... மேலும் பார்க்க