கட்சி நிலைப்பாடு குறித்து பேட்டியளிக்க அதிமுகவினருக்கு இபிஎஸ் கட்டுப்பாடு
கட்சி நிலைப்பாடு குறித்து அதிமுக தலைமையின் அனுமதியின்றி யாரும் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ஒப்புதலோடு, கட்சித் தலைமை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை :
எம்ஜிஆா், ஜெயலலிதா காலம்முதல் அதிமுக கட்டுக்கோப்பான இயக்கமாக இயங்கி வருகிறது.
கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தான தகவல்களை தலைமை உரிய நேரத்தில், உரிய முறையில் அவ்வப்போது தெரிவிக்கும்.
ஆகவே, அதிமுக நிா்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கட்சி நிா்வாகிகளும், கட்சி மீது பற்று கொண்டுள்ளவா்களும், கட்சி நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த எவ்வித கருத்துகளையும், கட்சித் தலைமையின் அனுமதி பெறாமல், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் இன்னபிற தகவல் தொடா்பு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.