மகளின் திருமணத்தன்று சோகம்: சாலை விபத்தில் தாய் உயிரிழப்பு; தந்தை மருத்துவமனையில...
அல்லு அர்ஜுன் - அட்லி படத்தைத் தயாரிக்கும் பிரபல தமிழ் தயாரிப்பு நிறுவனம்?
இயக்குநர் அட்லி - அல்லு அர்ஜுன் படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கரின் துணை இயக்குநராக இருந்து தனது முதல் படமான ‘ராஜா ராணி’ மூலம் பிரபலமானவர் இயக்குநர் அட்லி. அடுத்து நடிகர் விஜய்யுடன் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். பின்னர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தினை இயக்கினார். அப்படம் ரூ.1140 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது.
ஜவான் படத்தைத் தொடர்ந்து அட்லி, நடிகர் சல்மான் கானை வைத்து புதிய படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், அதற்கான அறிவிப்புகள் வெளியாகவில்லை.
இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா - 2 படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின் இயக்குநர் அட்லி படத்தில் நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகத் தகவல் வெளியானது. தற்போது, அதை உறுதிப்படுத்தும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, ‘மாஸும் மேஜிக்கும் சந்திக்கும் இடம்’ எனத் தெரிவித்துள்ளனர். மேலும், இப்படம் அறிவியல் புனைகதையாக உருவாகலாம் என்றும் தெரிகிறது.
இதையும் படிக்க: கிங்ஸ்டன் ஓடிடி வெளியீட்டுத் தேதி!