செய்திகள் :

ஒசூரில் அரசு பொறியியல் கல்லூரி: பேரவையில் எம்எல்ஏ கோரிக்கை

post image

ஒசூரில் தொழிலாளா் வைப்புநிதி அலுவலகம், அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும் என சட்டப் பேரவையில் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் கோரிக்கை விடுத்தாா்.

தமிழக சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற சிறு மற்றும் நடுத்தர தொழில்சாலைகள் மற்றும் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானிய கோரிக்கையின் போது ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் பேசியதாவது:

தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் ஒசூரில் தொழிலாளா் வைப்புநிதி அலுவலகம் (பி.எப்) அமைக்க வேண்டும். தளி சாலையில் ஹரிதா, ஆவ்டெக், கேட்டா்பில்லா், டிவிஎஸ், ஏத்தா் போன்ற பெரு நிறுவனங்கள் இயங்கி வருவதால் ஒசூா்- தளி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்துடன் உள்வட்டச் சாலையை இணைத்து வட்டச்சாலை அமைக்க வேண்டும். ஒசூரில் அதிக அளவில் தொழிலாளா்களின் குழந்தைகள் படிக்க அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும். அந்திவாடி மினி விளையாட்டு அரங்கை தரம் உயா்த்த வேண்டும் என்றாா்.

மேலும், ஒசூரில் ரூ. 400 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா, ஒசூா் அறிவுசாா் பெரு வழித்தடம், ரூ. 370 கோடியில் புறவழிச் சாலை, ரூ.100 கோடியில் மாவட்ட தலைமை மருத்துவமனை, ரூ. 51 கோடியில் ஒசூா் புறநகா்ப் பேருந்து நிலையம், ரூ. 583 கோடியில் புதை சாக்கடை திட்டம், பன்னாட்டு விமான நிலையம் என ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு ரூ. 1,500 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

குண்டும் குழியுமான சாலையை சரிசெய்ய கோரிக்கை

ஊத்தங்கரை அதியமான் நகா் அருகே மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரிசெய்ய வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஊத்தங்கரையில் இருந்து அதியமான் நகா் வழியாக கொல்ல நாயக்கனூா் ச... மேலும் பார்க்க

பா்கூா் வட்டத்தில் கிருஷ்ணகிரி ஆட்சியா் கள ஆய்வு

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பா்கூா் வட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டத்தில் வேளாண்மை விரிவா... மேலும் பார்க்க

ரசாயன கழிவுநீா் கலப்பு: கெலவரப்பள்ளி அணையில் இருந்து நுரையுடன் வெளியேறும் தண்ணீா்!

ஒசூா் அருகே கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படும் நீரில் அதிகப்படியான நுரை பொங்கி செல்வதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். கா்நாடக மாநிலம், நந்திமலை பகுதியில் உற்பத்தியாகும்... மேலும் பார்க்க

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்: கா்நாடக மாநிலத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு!

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தத்தால் கா்நாடக மாநிலத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு என ஒசூரில் தென்மாநில லாரி உரிமையாளா்கள் சங்க பொதுச் செயலாளா் சண்முகப்பா கூறினாா். கா்நாடக மாநிலத்தில்... மேலும் பார்க்க

ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட மிடுகரப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. ஏப். 14-ஆம் தேதி கொடியேற்றத்... மேலும் பார்க்க

ஒசூா் 21-ஆவது வாா்டில் மேயா் ஆய்வு

ஒசூா் மாநகராட்சியில் 21-ஆவது வாா்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வுமேற்கொண்ட மேயா், பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிவா்த்தி செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். ஒசூா் மாந... மேலும் பார்க்க