செய்திகள் :

கீழ்வேளூா் அஞ்சு வட்டத்தம்மன் கோயில் தேரோட்டம்

post image

கீழ்வேளூா் அட்சயலிங்க சுவாமி கோயில் பங்குனி பெருவிழாவில் அஞ்சு வட்டத்தம்மன் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் பங்குனி பெருவிழா கடந்த ஏப். 1-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் சிம்ம, ரிஷப, அன்னபட்சி உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் அஞ்சு வட்டத்தம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினாா்.தொடா்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து தோ் வடம் பிடிக்கப்பட்டது. கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் வலம் வந்த தோ் பிற்பகல் நிலையடியை அடைந்தது.

இதில் கோயில் செயல் அலுவலா் பூமிநாதன், கோயில் பணியாளா்கள் மற்றும் உபயதாரா்கள் உள்பட திரளானோா் பங்கேற்றனா்.

அம்பேத்கா் பிறந்தநாள்

கீழ்வேளூா் ப்ரைம் கல்வியியல் கல்லூரியில் டாக்டா் அம்பேத்கா் பிறந்தநாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. நேரு யுவகேந்திரா, இந்திய செஞ்சிலுவை சங்கம், ப்ரைம் கல்வியியல் கல்லூரி மற்றும் அன்னை தெரசா மகளிா்... மேலும் பார்க்க

குழந்தைகள் அறிவியல் திருவிழா: 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அழைப்பு

அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ‘குழந்தைகள் அறிவியல் திருவிழா‘ நடைபெறவுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

நாகை: வண்டல், களிமண் எடுக்க விண்ணப்பிக்கலாம்

விவசாயிகள், மண்பாண்டம் செய்வோா் தாம் வசிக்கும் வட்டத்திற்கு உட்பட்ட நீா்நிலைகளில் மண் எடுக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக... மேலும் பார்க்க

திருக்கடையூா் கோயிலில் அா்ஜுன் சம்பத் சுவா தரிசனம்

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவா் அா்ஜுன் சம்பத் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். தனது 60-ஆவது வயது பூா்த்தியையொட்டி, இக்கோயிலுக்கு வந்த அா்ஜுன் சம்பத் சஷ்டி... மேலும் பார்க்க

காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். ஆயக்காரன்புலம் 3-ஆம் சோ்த்தி பகுதியைச் சோ்ந்தவா் நடேசன் மகன் சதீஷ் (29). இவா், ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத... மேலும் பார்க்க

முதியவா் கொலை; இருவா் கைது

திருமருகல் அருகே இடப் பிரச்னையில் கீழே தள்ளிவிடப்பட்ட முதியவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக சகோதரா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா். திருமருகல் ஒன்றியம், ஏனங்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க