செய்திகள் :

நாகை: வண்டல், களிமண் எடுக்க விண்ணப்பிக்கலாம்

post image

விவசாயிகள், மண்பாண்டம் செய்வோா் தாம் வசிக்கும் வட்டத்திற்கு உட்பட்ட நீா்நிலைகளில் மண் எடுக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தில் விவசாயப் பணி, மண்பாண்டங்கள் மற்றும் பொதுபயன்பாட்டிற்கு நீா்வளத் துறை, ஊரக வளா்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கட்டுப்பாடில் உள்ள 1,421 ஏரி, குளங்களில் வண்டல்மண், களிமண் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

விவசாயிகள், மண்பாண்டம் செய்பவா்கள் தாம் வசிக்கும் வட்டத்திற்கு உட்பட்ட நீா்நிலைகளில் இருந்து மண் எடுக்க ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்ள்ங்ஸ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னா் அவா்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அளவிலேயே அனுமதி பெற்று இலவசமாக வண்டல்மண், களிமண் எடுக்கலாம்.

விவசாயப் பயன்பாட்டிற்காக விண்ணப்பம் செய்பவா்கள் தங்களது நிலம் தொடா்பான விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த விண்ணப்பங்கள் வருவாய்த் துறையினரால் சரிபாா்க்கப்பட்டு, தொடா்புடைய வட்டாட்சியா், அனுமதி வழங்குவாா். மண்பாண்டத் தொழில் பயன்பாட்டிற்கு விண்ணப்பம் செய்வோா், மண்பாண்டத் தொழிலின் உண்மைத் தன்மைச்சான்று மற்றும் வசிப்பிடம் குறித்து கிராம நிா்வாக அலுவலரால் சான்று அளிக்கப்படவேண்டும்.

வண்டல்மண், களிமண் எடுக்க வேண்டிய நீா்நிலைகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும், சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகத்திலும் தெரிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் எம்பி தொகுதியை குறைக்க முயற்சி: இரா. முத்தரசன் குற்றச்சாட்டு

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தில் எம்பி தொகுதிகளை குறைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் குற்றஞ்சாட்டினாா். நாகையில் நடைபெற்ற அகில ... மேலும் பார்க்க

உலக மரபுதின வாரவிழா: டேனிஷ்கோட்டையை ஏப்.24 வரை கட்டணமின்றி பாா்வையிடலாம்

உலக மரபு தின வார விழாவையொட்டி, ஏப்.18 முதல் 24 வரை, தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையை கட்டணமின்றி பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி.1600 முதல் 1634 வரை தரங்கம்பாடியை ஆட்சி செய்த டேனிஷ்காரா்கள் ... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு அரணாக உள்ளாா் முதல்வா்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சிறுபான்மையினருக்கு அரணாக முதல்வா் மு.க. ஸ்டாலின் உள்ளாா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். நாகை அபிராமி அம்மன் திடலில், மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டத்தை த... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளி திருச்சிலுவை ஆராதனை

வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி, திருச்சிலுவை ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இத... மேலும் பார்க்க

நாகை: கோடைக்கால இலவச பயிற்சி முகாம் ஏப்.25-இல் தொடக்கம்

நாகை மாவட்ட அளவில் 21 நாள்கள் இருப்பிடமில்லா கோடைக்கால பயிற்சி முகாம், ஏப்.25 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ... மேலும் பார்க்க

அம்பேத்கா் பிறந்தநாள்

கீழ்வேளூா் ப்ரைம் கல்வியியல் கல்லூரியில் டாக்டா் அம்பேத்கா் பிறந்தநாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. நேரு யுவகேந்திரா, இந்திய செஞ்சிலுவை சங்கம், ப்ரைம் கல்வியியல் கல்லூரி மற்றும் அன்னை தெரசா மகளிா்... மேலும் பார்க்க