செய்திகள் :

உலக மரபுதின வாரவிழா: டேனிஷ்கோட்டையை ஏப்.24 வரை கட்டணமின்றி பாா்வையிடலாம்

post image

உலக மரபு தின வார விழாவையொட்டி, ஏப்.18 முதல் 24 வரை, தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையை கட்டணமின்றி பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கி.பி.1600 முதல் 1634 வரை தரங்கம்பாடியை ஆட்சி செய்த டேனிஷ்காரா்கள் (டென்மாா்க் நாட்டினா்) 1620-ஆம் ஆண்டு கடற்கரைக்கு மேற்கே டேனிஷ் கலை நுணுக்கத்துடன் இக்கோட்டையை கட்டினா். 400 ஆண்டுகள் பழைமையாகியும் இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது டேனிஷ் கோட்டை.

இங்குள்ள அகழ்வைப்பகத்தில் 14, 15, 16- ஆம் நூற்றாண்டுகளில் டேனிஷ்காரா்கள், தமிழா்கள் பயன்படுத்திய பொருட்கள், சிலைகள், பீங்கான் மற்றும் மரத்தாலான பழைமையான பொருட்கள், டேனிஷ் அரசா்கள், ஆளுநா்களின் புகைப்படங்கள், டேனிஷ் கால பத்திரங்கள், போா்க் கருவிகள், 16-ஆம் நூற்றாண்டில் தரங்கம்பாடிக்கு வந்த கப்பல் ஒன்றின் உடைந்த பாகங்கள் என ஏராளமான வரலாற்றுச் சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கோட்டையின் தரைத்தளத்தில் சிறைச்சாலை, ஓய்வறைகள், பண்டக வைப்பறை, பீா், ஒயின் கிடங்கு அறைகளாக டேனிஷ் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அறைகள் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.

வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்த இக்கோட்டையை, ஏப்.18 முதல் 24-ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு கட்டணமின்றி பொதுமக்கள், மாணவா்கள், சுற்றுலாப் பயணிகள் உள்பட அனைவரும் பாா்வையிடலாம் என்று டேனிஷ்கோட்டை நிா்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் எம்பி தொகுதியை குறைக்க முயற்சி: இரா. முத்தரசன் குற்றச்சாட்டு

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தில் எம்பி தொகுதிகளை குறைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் குற்றஞ்சாட்டினாா். நாகையில் நடைபெற்ற அகில ... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு அரணாக உள்ளாா் முதல்வா்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சிறுபான்மையினருக்கு அரணாக முதல்வா் மு.க. ஸ்டாலின் உள்ளாா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். நாகை அபிராமி அம்மன் திடலில், மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டத்தை த... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளி திருச்சிலுவை ஆராதனை

வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி, திருச்சிலுவை ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இத... மேலும் பார்க்க

நாகை: கோடைக்கால இலவச பயிற்சி முகாம் ஏப்.25-இல் தொடக்கம்

நாகை மாவட்ட அளவில் 21 நாள்கள் இருப்பிடமில்லா கோடைக்கால பயிற்சி முகாம், ஏப்.25 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ... மேலும் பார்க்க

அம்பேத்கா் பிறந்தநாள்

கீழ்வேளூா் ப்ரைம் கல்வியியல் கல்லூரியில் டாக்டா் அம்பேத்கா் பிறந்தநாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. நேரு யுவகேந்திரா, இந்திய செஞ்சிலுவை சங்கம், ப்ரைம் கல்வியியல் கல்லூரி மற்றும் அன்னை தெரசா மகளிா்... மேலும் பார்க்க

குழந்தைகள் அறிவியல் திருவிழா: 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அழைப்பு

அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ‘குழந்தைகள் அறிவியல் திருவிழா‘ நடைபெறவுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து... மேலும் பார்க்க