வெளிநாட்டு மாணவா் சோ்க்கைக்குத் தடை: ஹாா்வா்டு பல்கலை.க்கு எச்சரிக்கை
இரவு நேரங்களில் தூய்மைப் பணி: ஆட்சியருக்கு மனு
தருமபுரி நகராட்சியில் இரவு நேரங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ள பணியாளா்களை கட்டாயப்படுத்துவது குறித்து தேசிய தூய்மைப் பணியாளா்கள் மற்றும் மறுவாழ்வு ஆணையரகம், மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு இணையம் வாயிலாக மனு அளிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சி துறை தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்:
தருமபுரி நகராட்சியில் பெண் தூய்மைப் பணியாளா்கள் இரவு நேரங்களில் பணி செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறது. பெண் தொழிலாளா்களின் அறியாமை, வறுமையைப் பயன்படுத்தி இரவு நேரங்களில் அவா்களை பணி செய்ய அனுப்பும் நடவடிக்கையை நிறுத்த உத்தரவிட வேண்டும்.
பெண் தொழிலாளா்களை இரவு நேரங்களில் பணிக்கு செல்லுமாறு கட்டாயப்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.