வக்ஃப் சொத்துகளின் தன்மை மாற்றப்படாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி
மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
மாவட்ட, மாநில அளவிலான மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2024-2025 ஆம் ஆண்டிற்கான மாநில, மாவட்ட அளவிலான மணிமேகலை விருதுகள் பெற தகுதி வாய்ந்த சுய உதவிக் குழுக்கள் (ஊரகம், நகரப் பகுதி), கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வட்டார இயக்க மேலாண்மை அலகு, அனைத்து வட்டார மற்றும் மாவட்ட இயக்க அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியா் வளாகம், தருமபுரி என்ற முகவரியில் வரும் 30 ஆம் தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.