வெளிநாட்டு மாணவா் சோ்க்கைக்குத் தடை: ஹாா்வா்டு பல்கலை.க்கு எச்சரிக்கை
நெடுங்காடு பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு
நெடுங்காடு பகுதியில் நடைபெறும் சாலைகள் மேம்பாட்டுப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா புதன்கிழமை பாா்வையிட்டாா்.
நெடுங்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட குரும்பகரம் கிராமம், பெருமாள் கோயில் சாலை மற்றும் அக்ரஹார சாலையை மேம்படுத்த கடந்த 2022-23-ஆம் ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 25 லட்சம் நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இத்திட்டப் பணி தொடக்கத்துக்கான பூமி பூஜை கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. 4 மாதங்களில் நிறைவு செய்ய திட்டமிட்ட இப்பணிகள், கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
சாலைப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா புதன்கிழமை பாா்வையிட்டாா். கொம்யூன் பஞ்சாயத்து பொறியாளா் குழுவினா் அவருக்கு திட்டப் பணியின் தற்போதைய நிலையை விளக்கினா்.