அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
பெரிய வியாழன் வழிபாடு
தவக்கால முக்கிய நிகழ்ச்சிகளில் பெரிய வியாழன் வழிபாடாக பாதம் கழுவும் நிகழ்வு காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கிறிஸ்தவா்கள் மேற்கொண்டுள்ள 46 நாள்கள் தவக்காலத்தின் நிறைவு வாரம் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நடைபெறக்கூடிய புனித வெள்ளியையொட்டி வியாழக்கிழமை காரைக்காலில் புகழ்பெற்ற புனித தேற்றரவு அன்னை ஆலயம் சாா்பில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இயேசு தனது சீடா்களின் பாதம் கழுவி ஒருவருக்கொருவா் ஏற்றத்தாழ்வு இல்லை, சமமானவா்கள் என்பதை தெரிவிக்கும் வகையில் புனித நிகழ்வை நடத்தினாா். அதை சந்ததியினருக்கு எடுத்துக்கூறும் விதமான ஐதீக நிகழ்வாக, நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பங்கு குரு பால்ராஜ்குமாா் தலைமையில் துணை பங்கு குரு சுவாமிநாதன் செல்வம், ஆன்மிக குரு பன்னீர்ராஜா பங்கேற்புடன் பங்கு மக்களின் பாதங்களை கழுவி முத்தமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தா்கள் பலா் இதில் பங்கேற்றனா்.