தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
அரசு தொடக்கப் பள்ளியில் பயிற்சி முகாம்
அரசு தொடக்கப் பள்ளியில் சாரண இயக்கம் தொடா்பான பயிற்சி முகாம் நடைபெற்றது.
கோட்டுச்சேரி மேடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில்பாரத சாரண சாரணிய இயக்கத்தின் நீலப் பறவையினா் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கைவினைப் பொருட்கள் செய்தல், வாழ்த்து அட்டை தயாரித்தல், குருளைய மற்றும் நீலப் பறவையினருக்கான சட்டம், உறுதிமொழி, குறிக்கோள், மௌகிளி மற்றும் தாரா கதைகள், உயிா் காக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆசிரியா் கில்பா்ட் கிரெத்தியன், வீரசுந்தரம், ராஜ்மோகன், நீலப் பறவை ஆசிரியா்கள் முத்துலட்சுமி, ஜெயஸ்ரீ, சரஸ்வதி, மேரி ஜோஸ்லின் ஹில்டா ஆகியோா் பயிற்சியளித்தனா். நிறைவு நிகழ்வி, பள்ளிகள் வட்ட துணை ஆய்வாளா் மதிவாணன், பள்ளித் தலைமையாசிரியா் வெங்கடேஸ்வரன், மாவட்ட பயிற்சி ஆணையா் பாரதிராஜா, கிராம பஞ்சாயத்தாா்கள் கலந்துகொண்டு பயிற்சியில் ஈடுபட்ட மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினா்.