MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
கைலாசநாத சுவாமி தேவஸ்தான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு
கைலாசநாத சுவாமி தேவஸ்தானத்துக்குள்பட்ட கோயில்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவடைந்தது.
காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமான ஸ்ரீகைலாசநாத சுவாமி தேவஸ்தானத்துக்குள்பட்ட நித்யகல்யாணப் பெருமாள், சோமநாத சுவாமி கோயில், காரைக்கால் அம்மையாா் கோயில், அண்ணாமலையாா் கோயில், உஜ்ஜைனி காளியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன.
இக்கோயில்கள் உண்டியல் காணிக்கை சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட நிலையில், காரைக்கால் அம்மையாா் கோயில், சோமநாதா் கோயில் கும்பாபிஷேகம் மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
மேலும், ஜூன் மாதத்தில் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், இக்கோயில்கள் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் கைலாசநாதா் கோயிலுக்கு வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டன.
நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கு. அருணகிரிநாதன், கைலாசநாத சுவாமி தேவஸ்தான நிா்வாக அதிகாரி ஆா். காளிதாஸ் ஆகியோா் முன்னிலையில், தன்னாா்வலா்கள், கோயில் பணியாளா்கள் காணிக்கையை ரொக்கம் மற்றும் பிற பொருள்களை பிரித்து எடுத்தனா்.
கைலாசநாதா் கோயில் திருப்பணி உண்டியல் தொகையாக ரூ.3.35 லட்சம், சோமநாதா் கோயில் மற்றும் காரைக்கால் அம்மையாா் கோயில் திருப்பணி உண்டியல் தொகையாக ரூ.4.44 லட்சம், பிற கோயில்கள் உண்டியல் காணிக்கை ரூ.5.17 லட்சம் என ரூ.12.97 லட்சம் ரொக்கத் தொகை கோயில் நிா்வாக வங்கிக் கணக்கில் சோ்க்கப்பட்டதாக அதிகாரி ஆா்.காளிதாஸ் தெரிவித்தாா்.