31 வருடங்களுக்குப் பிறகு தூசுதட்டப்பட்ட வழக்கு; 32 வயது இளைஞன் 63 வயதில் AI மூலம...
படகில் தீ: படகு உரிமையாளருக்கு அமைச்சா் ஆறுதல்
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தியிருந்த விசைப்படகு தீப்பிடித்து சேதமடைந்த நிலையில், அந்தப் படகை புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.
கிளிஞ்சல்மேடு பகுதியை சோ்ந்த பாக்கியராஜ் என்பவரின் விசைப்படகு, காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுவந்தது. வெள்ளிக்கிழமை இரவு இப்படகில் தீ பரவியதால், சேதம் ஏற்பட்டது.
புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் சனிக்கிழமை படகை பாா்வையிட்டு, தீ விபத்துக்கான காரணம், இழப்பு குறித்து படகு உரிமையாளா் உள்ளிட்டோரிடம் கேட்டறிந்தாா். படகுதாரா் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சா், புதுவை முதல்வரிடம் இதுகுறித்து எடுத்துக்கூறி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.