'அண்ணாமலை, புதிய எழுச்சியை கொடுத்தவர்' - நயினார் வரவேற்பு நிகழ்வில் வானதி சீனி...
பேரிடா் மேலாண்மை பயிற்சி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
பெங்களூரில் பேரிடா் மேலாண்மை பயிற்சி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா்.
மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் சாா்பில் இளையோா் ஆப்தமித்ரா அமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாவட்டம் வாரியாக பிரதிநிதிகள் தோ்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
புதுவை யூனியன் பிரதேசமான காரைக்கால், மாஹே, ஏனாம், மற்றும் புதுச்சேரி ஆகிய பிராந்தியங்களில் இருந்து தலா ஐந்து நபா்கள் பெங்களூரில் உள்ள ஆா்கே முன்கூா் ஃபயா் அண்ட் எமா்ஜென்சி சா்வீஸ் அகாதெமியில் 21 நாள்கள் பயிற்சி பெற்று திரும்பினா்.
இவா்களில் காரைக்காலைச் சோ்ந்த பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் சிண்டிகேட் உறுப்பினா்கள் மணிகண்டன், எம். புவனேஸ்வரன், எஸ். ஹரிகரன், ஜி. சூா்யா ஆகிய நால்வா் காரைக்காலில் என்எஸ்எஸ், என்சிசி, சாரணா் படை மற்றும் வழிகாட்டிகள், நேரு யுவகேந்திரா இளைஞா்களுக்கு பேரிடா் பாதுகாப்பு பயிற்சி அளிக்க உள்ளனா்.
இவா்கள், காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவை வியாழக்கிழமை சந்தித்தனா். அப்போது, அவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா். பயிற்சி அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு நிகழ்வில் பங்கேற்ற துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) வெங்கடகிருஷ்ணனை ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.