ஊழல்வாதிகளை மோடி அரசு சிறையிலடைக்கும்: நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பாஜக கருத்து
பிரசாந்த் நீல் படத்தில் ஜூனியர் என்டிஆரின் படப்பிடிப்பு தேதி அறிவிப்பு!
பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் ஜூனியர் என்டிஆர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்.20இல் தொடங்கியது.
பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸுடன் கடைசியாக இயக்கிய சலார் 1 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இதன் இரண்டாம் பாகம் வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து புதிய திரைப்படத்தை பிரசாந்த் இயக்கும் அறிவிப்பு வெளியானது.
ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இப்படம் 2026, ஜன 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதே நாளில் நடிகர் விஜய்யின் ஜன நாயகன் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் என்டிஆர் வரும் ஏப்.22ஆம் தேதி படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
