அந்த தியாகி யார்? பேரவைக்குள் பேட்ஜ் அணிந்துவந்த அதிமுகவினர்!
’அந்த தியாகி யார்’ என எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்குள் வருகை தந்துள்ளனர்.
சட்டப்பேரவை கூட்டத் தொடர் வழக்கம்போல காலை 9.30 மணிக்கு தொடங்கியது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கிட நிலையில், அமைச்சரின் பதிலுரையும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், டாஸ்மாக்கில் ஊழல் நடைபெறுவதைக் குறிப்பிடும் வகையில் சட்டையில் ’அந்த தியாகி யார்’ என எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்குள் வருகை தந்துள்ளனர்.
மக்களுக்கு 1,000 ரூபாய் கொடுப்பதுபோல கொடுத்து ரூ. 1,000 கோடி ஊழல் செய்த அந்த தியாகி யார்?’ என்றும் கேள்வி எழுப்பி அதிமுக சார்பில் தமிழக முழுவதும் போஸ்டர்கள் ஓட்டப்பட்டு வந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவைக்கு வந்துள்ளனர்.
இதையும் படிக்க: மசூதியில் காவிக் கொடிகளுடன் ஏறி கோஷமிட்ட ஹிந்து அமைப்பினர்!