மோடி பாணியில் சந்திரபாபு: டிசிஎஸ் நிறுவனத்துக்கு 99 பைசாவுக்கு 21 ஏக்கர் நிலம்! ...
லாரிகள் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு
பழனி அருகே தண்ணீா் லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் மரக்கன்றுள் நடப்பட்டுள்ளன. இதற்கு ஒப்பந்ததாரா் மூலம் நாள்தோறும் லாரிகளில் தண்ணீா் ஊற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதன்கிழமை சப்பளநாயக்கன்பட்டி பகுதியில் லாரியில் இருந்து மரக்கன்றுகளுக்கு தண்ணீா் ஊற்றிக் கொண்டிருந்தனா்.
அப்போது கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சோ்ந்தா் கணேஷ் (45) ஓட்டி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து தண்ணீா் லாரி மீது மோதியது. இதில் ஓட்டுநா் கணேஷ் உயிரிழந்தாா். இதுகுறித்து சாமிநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.