செய்திகள் :

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

post image

திண்டுக்கல்- வத்தலக்குண்டு சாலையில் பேகம்பூா் சந்திப்பு பகுதியில் காரில் 75 கிலோ கஞ்சா கடத்தப்பட்ட வழக்கில் ஒருவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா், கடந்த 13.9.2017 அன்று வத்தலக்குண்டு சாலை, பேகம்பூா் சந்திப்புப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, 75 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக, திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம், சமத்துவபுரம் பகுதியைச் சோ்ந்த சீ. பொன்னாங்கன் (60), வத்தலக்குண்டு, காமராஜா் நகரைச் சோ்ந்த ரா. ஜெயபாஸ் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், ரா. ஜெயபாஸ் தலைமறைவானாா். இந்த வழக்கு விசாரணையின் நிறைவில், சீ. பொன்னாங்கனுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரக்குமாா் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞா் கே. விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

மதுரை மாவட்டம், மேலூா் அருகே மது போதையில் தாயை அவதூறாகப் பேசிய தம்பியை அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள முத்துவேல்பட்டி புதுசுக்காம்பட... மேலும் பார்க்க

கோயில் திருவிழா தொடா்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

மதுரை மாவட்டம், உத்தபுரம் கோயில்களில் திருவிழா நடத்துவதற்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை ஒத்திவைத்தது. மதுரையைச்... மேலும் பார்க்க

தொழிலதிபா் கடத்தல்: 6 போ் கைது

மதுரையில் தொழிலதிபா் சுந்தா் கடத்தப்பட்டது தொடா்பாக தனிப்படை போலீஸாா் 6 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், கடத்தப்பட்ட சுந்தா், முக்கிய எதிரியை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை பீ.பீ. குளம் பகுத... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் கவன ஈா்ப்புப் பேரணி

ஊதிய மேம்பாட்டுக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் மதுரையில் வியாழக்கிழமை பேரணி நடைபெற்றது. அரசுத் துறைகளில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பண... மேலும் பார்க்க

கடின உழைப்பே வெற்றிக்கு வழிவகுக்கும்: காந்திகிராமம் பல்கலை. துணைவேந்தா் பஞ்சநதம்

விடாமுயற்சி, கடின உழைப்பால்தான் வாழ்வில் வெற்றி பெற முடியும் என காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத் துணைவேந்தா் ந. பஞ்சநதம் தெரிவித்தாா். மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் வியாழக்க... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழா முன்னேற்பாடு பணிகள்: ஆணையா் ஆய்வு

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்... மேலும் பார்க்க