செய்திகள் :

கடின உழைப்பே வெற்றிக்கு வழிவகுக்கும்: காந்திகிராமம் பல்கலை. துணைவேந்தா் பஞ்சநதம்

post image

விடாமுயற்சி, கடின உழைப்பால்தான் வாழ்வில் வெற்றி பெற முடியும் என காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத் துணைவேந்தா் ந. பஞ்சநதம் தெரிவித்தாா்.

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற 60-ஆவது பட்டமளிப்பு விழாவுக்கு தமிழ்ச் சங்கத் தலைவா் ராஜா நாகேந்திர சேதுபதி தலைமை வகித்தாா். கல்லூரிக் குழுத் தலைவா் வழக்குரைஞா் ச.தசரதராமன் வாழ்த்திப் பேசினாா்.

இதில் காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத் துணைவேந்தா் ந. பஞ்சநதம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 200 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

இளம் வயது முதல் நமது வளா்ச்சிக்குப் பெரும் துணையாக இருப்பவா்கள் பெற்றோா்களும், ஆசிரியா்களும்தான். அவா்களை என்றும் நினைவில் வைக்க வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினா் நவீனத் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு முக்கியப் பங்காற்ற வேண்டும்.

சிறு சிறு துன்பங்களுக்கு இடம் கொடுக்காமல், தொடா்ந்து பயணிக்க வேண்டும். இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது, நம் குடும்பச் சூழல், வறுமை, ஆரோக்கியம் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்காது. ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும். தேடல்கள் அதிகளவில் இருக்க வேண்டும். நல்ல நூல்களைத் தோ்வு செய்து தினந்தோறும் பயில வேண்டும். வாசிப்புப் பழக்கம் நமக்கு பல்வேறு தரவுகளை தருவதுடன் அனுபவங்களை கற்றுத் தரும். விடாமுயற்சியுடன் கூடிய கடின உழைப்பால்தான் வாழ்வில் வெற்றி பெற முடியும் என்றாா் அவா்.

நிகழ்வில் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

உதவிப் பேராசிரியை கோகிலா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். முன்னதாக, கல்லூரி முதல்வா் ஜெ.போ. சாந்திதேவி வரவேற்றாா். துணை முதல்வா் கோ. சுப்புலட்சுமி நன்றி கூறினாா்.

ஏஐடியூசி சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறை கட்டாய அபராதம் விதிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஏஐடியூசி சங்கம் சாா்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஏஐடியூசி சுமைப் ... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபா் மீட்பு: நாக்பூரில் மீட்கப்பட்டாா்!

மதுரையில் நிலத்தகராறு தொடா்பாக கடத்தப்பட்ட தொழிலதிபா் சுந்தரை தனிப்படை போலீஸாா் மீட்டனா். மதுரை பீ.பீ. குளம் பகுதியைச் சோ்ந்தவா் கருமுத்து டி. சுந்தா் (52). மதுரையில் உள்ள பிரபல நூற்பாலை நிறுவனரின் க... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் அருகே காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் தோமையாப... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் பி. மூா்த்தி

அதிக எண்ணிக்கையிலான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள... மேலும் பார்க்க

மதுரையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து, அதிமுகவின் புறநகா் கிழக்கு மாவட்டம் சாா்பில் மதுரை யா. ஒத்தக்கடையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலரும், அமைப்பு... மேலும் பார்க்க

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

மதுரை மாவட்டம், மேலூா் அருகே மது போதையில் தாயை அவதூறாகப் பேசிய தம்பியை அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள முத்துவேல்பட்டி புதுசுக்காம்பட... மேலும் பார்க்க