புனித வெள்ளி, வார விடுமுறை: 2,322 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
அறிவிக்கப்படாத மின் தடையால் மாணவா்கள் அவதி
திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாத மின் தடையால் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, நகரிகாத்தான், பாண்டுகுடி, வெள்ளையுபுரம் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாத மின் தடை அடிக்கடி ஏற்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் மின் சாதனங்களை இயக்க முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனா்.
மேலும், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு, பள்ளி, கல்லூரி தோ்வுகள் நடைபெற்று வரும் சூழலில், மாணவ, மாணவிகளும் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனா். தற்போது, கோடை காலம் தொடங்கிய நிலையில், மின் தடை காரணமாக மின் விசிறிகளை இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அவதிக்குள்ளாகின்றனா். எனவே, மின்சாரத் துறையினா் தகுந்த நடவடிக்கை எடுத்து, சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.