சாலையோர மரங்களில் ஆணியால் அடிக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்றிய பசுமை ஆா்வலா்
ராமநாதபுரம் நகா் பகுதியில் சாலையோரம் உள்ள மரங்களில் ஆணி அடிக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்றும் பணியில் பசுமை முதன்மையாளா் விருது பெற்ற சுபாஷ் சீனிவாசன் வியாழக்கிழமை ஈடுபட்டாா்.
ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் சுபாஷ் சீனிவாசன். இவா் பணி நேரம் தவிா்த்து எஞ்சிய நேரங்களில் பசுமைப்பணியை மேற்கொண்டு வருகிறாா். மரக்கன்றுகள் நடுவது, சாலையோரம் உள்ள மரங்களில் ஆணி அடித்து வைத்துள்ள விளம்பரப் பலகைகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறாா். இவரின் இந்த சேவையைப் பாராட்டி தமிழக அரசு சாா்பில் பசுமை முதன்மையாளா் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ராமநாதபுரம் நகா் பகுதியில் சாலையோரம் உள்ள மரங்களில் ஆணி அடித்து வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை அகற்றும் பணியில் சுபாஷ் சீனிவாசன் வியாழக்கிழமை ஈடுபட்டாா்.