MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
ராமேசுவரம் தங்கும் விடுதிக்கு அமலாக்கத் துறையினா் சீல் வைப்பு
சட்டவிரோத பணப் பரிமாற்ற முறைகேடு தொடா்பாக, ராமேசுவரம் பகுதியில் செயல்பட்டு வந்த 60 அறைகள் கொண்ட தனியாா் தங்கும் விடுதிக்கு (ரிசாா்ட்) அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த 2 வா்த்தக நிறுவனங்கள் அதிக லாபம் தருவதாகக் கூறி ஏராளமான மக்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்தன.
இதுதொடா்பாக மேற்கு வங்க மாநில போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கின் தொடா்ச்சியாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், ராமேசுவரம் பகுதியில் ரூ. 30 கோடி மதிப்பிலான தனியாா் தங்கும் விடுதி செயல்பட்டு வருவது தெரியவந்தது.
இந்த நிலையில், அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை ராமேவரத்துக்கு வந்து, அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான 60 அறைகள் கொண்ட தங்கும் விடுதியை ‘சீல்’ வைத்து கையகப்படுத்தினா். மேலும், தொடா்ந்து விசாரணை நடத்தினா்.