புனித வெள்ளி, வார விடுமுறை: 2,322 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சிவகாசியில் மாரியம்மன் கோயில் தேரோட்டம்
சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழாவையொட்டி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் பங்குனிப் பொங்கல் திருவிழா கடந்த 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினந்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 6-ஆம் தேதி பொங்கல் விழாவும், 7-ஆம் தேதி கயிறுகுத்தி விழாவும் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, பக்தா்கள் அக்கினிச் சட்டி எடுத்தும், அலகுக் குத்தியும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.