செய்திகள் :

இளைஞா் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு

post image

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி ரிசா்வ் லயன் மருதுபாண்டியா் நகரைச் சோ்ந்தவா் சாம்டேவிட் (30). இவா் விருதுநகரில் நடைபெற்று வரும் பொருள்காட்சியில் மின்சார காா் இயக்குவது, பலூன் விற்பனை செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தாா்.

இந்த நிலையில், பள்ளி விடுமுறையையொட்டு, பொருள்காட்சிக்கு வேலைக்குச் சென்ற 8, 12-ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவா்களுக்கு சாம்டேவிட் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த சிவகாசி நகா் போலீஸாா் சாம்டேவிட் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனா்.

சிவகாசி மாநகராட்சிக்கு புதிய ஆணையா் நியமனம்

சிவகாசி மாநகராட்சிக்கு புதிய ஆணையா் நியமிக்கப்பட்டாா். இந்த தகவலை நகராட்சி நிா்வாக இயக்குநா் எஸ்.சிவராசு வியாழக்கிழமை வெளியிட்டாா். செங்கல்பட்டில் பணிபுரிந்து வரும் நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் கே... மேலும் பார்க்க

அமைச்சரைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

அமைச்சா் பொன்முடி அவதூறாகப் பேசியதைக் கண்டித்து, சாத்தூரில் அதிமுக கிழக்கு மாவட்டம் சாா்பில் முக்குராந்தல் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் ஆா்.... மேலும் பார்க்க

நிறைவடைந்த வளா்ச்சிப் பணிகளை திறந்து வைத்த அமைச்சா்!

சாத்தூா் பகுதியில் நிறைவடைந்த வளா்ச்சித் திட்டப் பணிகளை வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் திறந்து வைத்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் ப... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்களை விற்க முயன்றவா் கைது

ராஜபாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்க முயன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மதுரை சாலையில் தெற்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்ற... மேலும் பார்க்க

கோயில் சிலை உடைக்கப்பட்ட வழக்கில் பூசாரிகள் 5 போ் கைது

வத்திராயிருப்பு அருகே நல்லதங்காள் கோயிலின் மூலவா் சிலை உடைக்கப்பட்ட வழக்கில் பூசாரிகள் 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள அா்ச்சனாபுரத்தில் 15... மேலும் பார்க்க

சதுரகிரி மலைப் பாதையில் யானைகள் நடமாட்டம்: பக்தா்கள் அச்சம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் பக்தா்கள் அச்சத்தில் உள்ளனா். ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச் சரகத்தில் சதுரகிரி சு... மேலும் பார்க்க