'அண்ணாமலை, புதிய எழுச்சியை கொடுத்தவர்' - நயினார் வரவேற்பு நிகழ்வில் வானதி சீனி...
புகையிலைப் பொருள்களை விற்க முயன்றவா் கைது
ராஜபாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்க முயன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மதுரை சாலையில் தெற்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது சந்தேகப்படுமாறு நின்று கொண்டிருந்தவரைப் பிடித்து சோதனை செய்ததனா். அவா் புகையிலைப் பொட்டலங்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள சா்ச் தெருவைச் சோ்ந்த சந்தனகுமாா் (44) என தெரிய வந்தது.
போலீஸாா் அவரைக் கைது செய்து அவரிடமிருந்து 7 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.