``இண்டியா, பாஜக, விஜய் அணி என 3 கூட்டணிகள் தேர்தலில் களமிறங்கும்'' - மாணிக்கம் த...
டார்-ஆர்டர் பேட்டர்கள் ஃபார்முக்கு திரும்ப வேண்டும்: ஃபிளெமிங்
சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் டார்-ஆர்டர் வீரர்கள் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் எனக் கூறியுள்ளார்.
சிஎஸ்கே அணி முதல் போட்டியில் மும்பையுடன் வென்றது. பின்னர், ஹாட்ரிக் தோல்வியைத் தழுவியுள்ளது.
குறிப்பாக சேப்பாக்கத்தில் தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்களிடையே மிகக் கடுமையான விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
சிஎஸ்கே அணியின் டாப்-ஆர்டர், மிடில் ஆர்டர் பேட்டர்கள் மோசமாக விளையாடி வருகிறார்கள்.
இது குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளெமிங் கூறியதாவது:
விஜய் சங்கர் முழுவதுமாக போராடிக்கொண்டு இருந்தார். அவருக்கு டைமிங் கிடைக்கவில்லை. ஆனால், 12-16 ஓவர்கள் அனைவருக்குமே சிரமமாகவே இருந்தன.
பார்ப்பதற்கே கடினமாக இருந்த ஆட்டம் நிச்சயமாக விளையாடுவதற்கு இன்னமும் கடினமாக இருந்திருக்கும். அதனால், என்னதான் அடிக்க வேண்டுமென நோக்கம் இருந்தாலும் வித்தியாசமாக முயற்சித்தாலும் இலக்கு பெரியதாக தொடங்கிவிட்டது.
டாப் 3, 4-இல் யாராவது சிலர் ஃபார்முக்கு திரும்ப வேண்டும். அங்கிருந்து ரன்கள் வரவேண்டும். அப்போதுதான் இறுதியில் ஆட்டத்தை முடிக்க முடியும்.
துபே எதிரணிக்கு சரியான நேரத்தில் ஆட்டமிழந்தார். அனைவருமே இப்படியாக தவறான நேரத்தில் ஆட்டமிழந்தார்கள். வழக்கமாக 6-15 அல்லது 15- 20 ரன்களில் தோற்பது எரிச்சலாக இருக்கிறது என்றார்.