நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் ஸ்ரீராமநவமி விழா!
நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் ஶ்ரீராமநவமி பெருவிழாவையொட்டி திருக்கொடி ஏற்றம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெற்றது.
இதனைமுன்னிட்டு சீதா, லெட்சுமணர், அனுமன், சமேத சந்தானராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
திருக்கொடியேற்றத்தை வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் சொல்லியும், நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம் செய்தும் நடத்தி வைத்தனர்.
கொடியேற்றத்தில் இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நீ.கோபாலசுவாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வரும் 16 ம் தேதி வரை நாள்தோறும் சுவாமி, தாயார் சன்னதிகளில் சிறப்பு ஆராதனைகள், சுவாமி வீதியுலா நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.
