Gold சார்ந்த நிதி நிறுவனங்களுக்கு அடி... என்ன காரணம்? | IPS Finance - 182 | Sens...
கிங்ஸ்டன் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
நடிகர் ஜி.வி.பிரகாஷ், திவ்யபாரதி நடிப்பில் வெளியான கிங்ஸ்டன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கிங்ஸ்டன் திரைப்படம் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 25-வது படமாகும். இப்படத்துக்கு அவரே இசையமைத்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவான கிங்ஸ்டன் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார்.
கடலில் உள்ள மர்மத்தைக் கண்டறியும் மீனவரின் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் மீனவராக நடித்துள்ளார்.
பேச்சிலர் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த திவ்யபாரதி இப்படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.
கடந்த மார்ச் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், வரும் ஏப். 13 ஆம் தேதி ஜீ5 ஓடிடி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.
Under your bed was just level one!♂️#Kingston World Premiere on OTT & TV on April 13th 12pm! Stay Tuned! ✨@gvprakash@storyteller_kp@ZeeStudiosSouth@ParallelUniPic@divyabarti2801@gokulbenoy@dhilipaction@Sanlokesh@PoornimaRamasw1@moorthy_artdir@gdinesh111… pic.twitter.com/pLf82OeSM2
— ZEE5 Tamil (@ZEE5Tamil) April 6, 2025
இதையும் படிக்க: மலையாள சினிமாவில் முதல்முறை.. எம்புரான் ரூ.250 கோடி வசூல்!