ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழ் புலிகள் கட்சியினா் 230 போ் கைது
உத்தரகண்ட்: 15 புதிய சிறைக் கைதிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று!
உத்தரகண்ட் மாநிலத்தின் சிறையில் 15 புதிய சிறைக் கைதிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஹரிதுவார் மாவட்ட சிறையில் அடைக்கப்பட அழைத்து வரப்பட்ட புதிய சிறைக் கைதிகளுக்கு கடந்த ஏப்.7 அன்று மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்தச் சோதனைகளின் ஒரு பகுதியாக எச்.ஐ.வி. சோதனையும் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்நிலையில், அவ்வாறு புதியதாக அழைத்து வரப்பட்ட கைதிகளில் 15 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உறுதிச் செய்யப்பட்டுள்ளாதாக அந்த சிறையின் தலைமைக் காவலர் மனோஜ் குமார் ஆர்யா இன்று (ஏப்.9) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சிறைக்கு புதியதாக ஒரு கைதி அழைத்து வரப்பட்டால் அவருக்கு எச்.ஐ.வி. உள்பட அனைத்து விதமான மருத்துவச் சோதனைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தற்போது அந்தத் தொற்றுக் கண்டறியப்பட்ட 15 கைதிகளுக்கு முறையான மருத்துவச் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் கண்டறியப்பட்ட எச்.ஐ.வி. தொற்றுக்களின் எண்ணிக்கையானது 2010-ல் பதிவான எண்ணிக்கையை விட 44 சதவிகிதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:குடியரசுத் தலைவருக்கு ஸ்லோவாக்கியா அளித்த பரிசு!