டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
சட்டவிரோதமாக தில்லியில் குடியேறிய 8 வங்கதேசத்தினர் கைது!
சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 8 வங்கதேசத்தினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெற்கு தில்லியின் காட்வாரியா சாராய் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறி வாழ்ந்து வந்த பாபியா காத்தூன் (வயது 36) மற்றும் அவரது மகளும் ஒப்பனைக் கலைஞருமான சதியா சுல்தானா (21) ஆகிய இருவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், பாபியா காத்தூனின் வங்கதேசத்தைச் சேர்ந்த கணவர் பிரிந்து சென்றதினால், கோஜா தொங்கா எல்லையின் வழியாகக் கடந்த 2007-ம் ஆண்டு சட்டவிரோதமாக இந்தியாவினுள் குடியேறியுள்ளார். பின்னர், தில்லியிலுள்ள வீடுகளில் பணியாளர்களாக வேலை செய்து வந்த அவர், தனது மகளை ஒப்பனைக் கலைஞருக்காக பயிற்சிப் பெற வைத்துள்ளார்.
இதேபோல், காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சதியா நிகேதன் சந்தை மற்றும் மோதி பாக் ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ரபியுல் இஸ்லாம் (38) என்ற நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கடந்த 2012-ம் ஆண்டு சட்டவிரோதமாக தில்லியில் குடியேறியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
பின்னர், கடந்த 2016-ல் திரிபுரா எல்லை வழியாக நுழைந்த அவரது மனைவியான சீமா மற்றும் அவர்களது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், 2023-ல் தரகர் மூலமாக கத்வாரியா சராய் பகுதியில் குடியேறிய ரிஃபாத் அரா மொய்னா என்ற வங்கதேசப் பெண்ணும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரையும் நேற்று (ஏப்.17) வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தில் தங்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட அதிகாரிகள் ஆஜர் படுத்தினர்.
வங்கதேசத்திலிருந்து தில்லியில் சட்டவிரோதமாக குடியேறும் அந்நாட்டு மக்கள் பெரும்பாலும் அம்மாநிலத்தின் சத்யா நிகேதன், கிஷங்கார் மற்றும் கட்வாரியா சராய் ஆகிய பகுதிகளில் வசித்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க:பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!