செய்திகள் :

சீனாவுக்குத்தான் இழப்பு: 84% வரி விதிப்பு குறித்து அமெரிக்கா கருத்து!

post image

அமெரிக்க இறக்குமதிகளுக்கு 84% வரியை சீன அரசு விதித்துள்ளது. சீனாவில் இருந்து வரும் இறக்குமதிகளுக்கு 104% வரி விதித்த அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முந்தைய வரியில் இருந்து கூடுதல் வரியை சீன அரசு விதித்துள்ளது.

பரஸ்பர வரி விதிப்பில் சீன அரசுக்கு அதிகபட்ச வரி விதித்த அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கைக்கு எதிராக சீன அரசின் இந்த வரிவிதிப்பை 'பழிவாங்கும் வரி' என அமெரிக்க அரசு குறிப்பிடுகிறது.

அமெரிக்க இறக்குமதிகளுக்கு சீன அரசு விதித்துள்ள வரி உயர்வு குறித்து அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெஸ்சன்ட் கூறியிருப்பதாவது,

''சீன அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வராமல் பழிவாங்கும் வரியை விதிப்பது துரதிருஷ்டவசமானது. ஏனெனில், சர்வதேச வணிக அமைப்பில் மோசமான குற்றவாளியாக அவர்கள் உள்ளனர்.

அமெரிக்க அதிகாரிகள் உடனான ஆலோசனையில், சீனாவின் வணிகக் கொள்கைகளை மறுசீரமைப்பது குறித்து அண்டை நாடுகள் ஆலோசிக்க முன்வந்தன. இது அமெரிக்காவுக்கான மிகப்பெரிய வெற்றி. உற்பத்தியில் மறு சீரமைப்பைக் கொண்டுவர அமெரிக்க முயற்சிக்கிறது. அதிக நுகர்வை நோக்கி சீனா மறு சீரமைப்பைக் கொண்டுவர வேண்டும்.

புதிய வரிகளுக்கு இசைவு தெரிவிக்கும் விதமாக தங்கள் நாணய மதிப்பை குறைக்கும் முயற்சியில் சீனா ஈடுபடலாம். பணமதிப்பிழப்பை ஈடுகட்ட உலகின் அனைத்து நாடுகளும் வரி விதிப்பை உயர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். அதனால், அவர்கள் இதனைச் செய்யாமல், பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.

அமெரிக்க இறக்குமதிகளுக்கு அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 10% வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 5ஆம் தேதி அமலுக்குக் கொண்டுவந்தார்.

இதனைத் தொடர்ந்து பரஸ்பர வரி விதிப்பின் மூலம் உலக நாடுகளின் இறக்குமதிகளுக்கு அமெரிக்காவின் திருத்தப்பட்ட வரி விதிப்பையும் இன்று முதல் (ஏப். 9) அமல்படுத்தினார்.

இதில் இந்திய இறக்குமதிகளுக்கு 26% வரியும், சீனாவுக்கு 104% வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 96 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு!

வாடிகன் நகரம், உலகின் மிகக் சிறிய நாடாகக் கருதப்படும் நிலையில், கடந்த 96 ஆண்டுகளில், இங்கு ஒரு குழந்தைக் கூட பிறக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் இந்த நகரில் இடம்பெற்ற... மேலும் பார்க்க

ஹார்வர்டு பல்கலை.க்கு அளிக்கப்படும் வரி விலக்கு ரத்து?

ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு அளிக்கப்படும் வரி விலக்கை ரத்து செய்ய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பல்வேறு நா... மேலும் பார்க்க

அடுத்த வாரம் இந்தியா வருகிறாா் அமெரிக்க துணை அதிபா்

அமெரிக்க துணை அதிபா் ஜெ.டி.வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ் மற்றும் 3 குழந்தைகளுடன் அடுத்த வாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறாா். அமெரிக்க அதிபரின் டிம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பு அறிவிப்பால் சா்வதேச ... மேலும் பார்க்க

பிரிட்டன்: மருத்துவ உயா் கல்வி அமைப்பின் தலைவராக இந்திய வம்சாவளி மருத்துவா்

பிரிட்டனில் மிகப் பழமை வாய்ந்த ‘ராயல் காலேஜ் ஆஃப் ஃபிஷிசியன்ஸ்’ (ஆா்சிபி) மருத்துவ உயா் கல்வி அமைப்பின் 123-ஆவது தலைவராக இந்திய வம்சாவளி பெண் மருத்துவா் மும்தாஜ் படேல் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இந்த... மேலும் பார்க்க

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் மத அடிப்படையில் பிரதிநிதித்துவம்: இந்தியா எதிா்ப்பு

நியூயாா்க்: வருங்காலத்தில் சீா்திருத்தப்படக் கூடிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாடுகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க மதம், நம்பிக்கை போன்ற புதிய அளவுகோல்களை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளுக்கு இந்தியா ... மேலும் பார்க்க

மாலத்தீவு: இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

மாலி: இஸ்ரேலைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டுக்கு வர மாலத்தீவு தடை விதித்துள்ளது. காஸா போரில் பாலஸ்தீனத்துக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அந்நாட்டு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள... மேலும் பார்க்க