சோகத்திலும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி!
தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள சிஎஸ்கே அணியில் இந்த நல்ல விஷயத்தை மறந்துவிட்டனர்.
அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிரண்டு இடங்களை சிஎஸ்கே வீரர்கள் பிடித்துள்ளார்கள்.
முதலிடத்தில் நூர் அகமது 11 விக்கெட்டுகளும் கலீல் அகமது 10 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தியுள்ளார்கள்.
பேட்டிங்கில் சொதப்பி வந்த சிஎஸ்கே அணி கடைசி போட்டியில் ஓரளவுக்கு நன்றாக விளையாடியது.
ஃபீல்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டுவரும் சிஎஸ்கே அணி விரைவில் அதைச் சரிசெய்ய வேண்டும்.
கடந்த 5 போட்டிகளில் 11 கேட்ச்சுகளை சிஎஸ்கே வீரர்கள் தவறவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
10ஆவது ஓவரில்தான் சிஎஸ்கே வீரர்கள் சிக்ஸர்கள் அடிக்க தொடங்குகிறார்கள்.
பவர்ஹிட்டர்ஸ் எனப்படும் அதிரடி பேட்டர்கள் சிஎஸ்கே அணியில் குறைவாக இருப்பது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
கேப்டன்சி, ஃபீல்டிங், பேட்டிங் என சிஎஸ்கே அணிக்கு இது மோசமான சீசனாக இருந்தாலும் பந்துவீச்சில் நன்றாகவே செயல்பட்டு வருகிறார்கள்.
ஐபிஎல் 2025-இல் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியல்
1. நூர் அகமது - 11
2. கலீல் அகமது - 10
3. ஹார்திக் பாண்டியா - 10
4. முகமது ஷமி - 9
5. மிட்செல் ஸ்டார்க் - 9
6. ஷர்துல் தாக்குர் - 9
The swing and spin #PBKSvCSK#WhistlePodu#Yellovepic.twitter.com/5kUOQZ1I0y
— Chennai Super Kings (@ChennaiIPL) April 9, 2025