அடுத்த 2 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!
அடுத்த 2 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலில் ஏப்.7 இல்லது 8 -ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது.
இதனால், திங்கள்கிழமை (ஏப்.7) முதல் ஏப்.12 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை)ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: அமைச்சர் நேருவின் மகன், சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!