சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி தகவல்
நாய்ஸில் ரூ.173 கோடி முதலீடு செய்யும் போஸ் கார்ப்பரேஷன்!
புதுதில்லி: சர்வதேச ஆடியோ நிறுவனமான போஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், இந்திய ஸ்மார்ட் லைஃப்ஸ்டைல் பிராண்டான நாய்ஸ் நிறுவனத்தில் 20 மில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.173 கோடி அளவு முதலீடு செய்துள்ளது.
இது குறித்து நாய்ஸ் இணை நிறுவநர் அமித் கத்ரி லிங்க்ட்இனில் பதிவு செய்ததாவது:
ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. போஸ் நிறுவனமானது நாய்ஸில் 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
போஸின் தொடர்ச்சியான நம்பிக்கைக்கு நாங்கள் நம்பமுடியாத அளவிற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அதே வேளையில், நாங்கள் அடுத்து என்ன கட்டமைக்கிறோம் என்பதில் இன்னும் உற்சாகமாக இருக்கிறோம் என்றார்.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 45 காசுகள் சரிந்து ரூ.86.71-ஆக முடிவு