RCB vs PBKS : 'எங்களோட பேட்டிங்லதான் பெரிய பிரச்சனை இருக்கு!' - கேப்டன் ரஜத் பட்...
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் உயர்ந்து ரூ.85.37 ஆக முடிவு!
மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து நான்காவது அமர்வாக வலுவடைந்து இன்று (வியாழக்கிழமை) 27 காசுகள் உயர்ந்து ரூ.85.37 ஆக முடிவடைந்தது.
உள்நாட்டு பங்குகளில் வெளிநாட்டு நிதி வரத்து ஆகியவற்றின் அடிப்படையில் இது உயர்ந்து முடிந்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.48 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இது அதிகபட்சமாக ரூ.85.31 ஆகவும், பிறகு குறைந்தபட்சமாக ரூ.85.62 ஐ தொட்டு, முடிவில் 16 காசுகள் உயர்ந்து ரூ.85.37ஆக முடிந்தது.
நேற்று (புதன்கிழமை) டாலருக்கு நிகரான ரூபாய் 16 காசுகள் உயர்ந்து ரூ.85.64 ஆக முடிவடைந்தது.
இதையும் படிக்க: தொடர்ந்து 4-வது நாளாக சென்செக்ஸ் 1,509 புள்ளிகளும், நிஃப்டி 414 புள்ளிகளுடன் உயர்ந்து முடிவு!