'முதலாம் ஆண்டு மாணவரிடம் கேட்டால் கூட சொல்லுவார்!' பிரதமரை சாடிய ப.சிதம்பரம்
முந்தைய இந்திய பொருளாதாரம் குறித்து தற்போதைய மத்திய அமைச்சர்கள் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது...
"பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் 2004 - 2014-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டிற்கு கொடுத்த நிதியை விட, 2014 - 2024-ம் ஆண்டுகளில் அதிக நிதி கொடுத்து உள்ளோம் என்று கூறி வருகிறார்கள்.
உதாரணத்திற்கு, தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட நிதியை விட, ஏழு மடங்கு அதிக நிதியை அவரது அரசு கொடுத்ததாக பிரதமர் கூறியுள்ளார்.
முதலாம் ஆண்டு பொருளியல் மாணவரிடம் கேட்டால் கூட, முந்தைய ஆண்டுகளை விட தற்போது 'பொருளாதார அளவுகோல்' அதிகம் இருக்கும் என்று கூறுவார்கள்.
முந்தைய ஆண்டுகளை விட, தற்போது ஜி.டி.பி அளவு அதிகமாக உள்ளது.
மத்திய அரசின் பட்ஜெட்டின் அளவு ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டுகளை விட அதிகமாக இருக்கிறது.
அரசின் செலவுகளும் முந்தைய ஆண்டுகளை விட, ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக உள்ளது.
முந்தைய ஆண்டை விட, உங்களுக்கு இப்போது ஒரு வயது அதிகமாகிறது.
எண்களின் அடிப்படையில் பார்த்தால், எண்கள் அதிகமாகத் தான் இருக்கும். ஆனால், அது ஜி.டி.பி அடிப்படையிலும், மொத்த செலவுகளின் விகிதங்கள் அடிப்படையிலும் உயர்வாக உள்ளதா?"
என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Hon'ble PM and Central ministers constantly say that they have given more money to TN in 2014-24 than was given in 2004-14
— P. Chidambaram (@PChidambaram_IN) April 6, 2025
For example, Hon'ble PM said that his government has given for railway projects in TN seven times more money than before
Ask a first year student of…